Kathir News
Begin typing your search above and press return to search.

இசையமைப்பாளர் தேவா வில்லனாக நடிக்கிறாரா?

இசையமைப்பாளர் தேவா விரைவில் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இசையமைப்பாளர் தேவா வில்லனாக நடிக்கிறாரா?

KarthigaBy : Karthiga

  |  4 Sep 2023 4:45 PM GMT

தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார் . இந்த படம் டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது . தொடர்ந்து தனுஷ் தனது ஐம்பதாவது படத்தில் நடிப்பதுடன் அவரே டைரக்டர் செய்கிறார். இதில் எஸ். ஜே.சூர்யா, சந்தீப் கிஷன் ,அபர்ணா முரளி ஆகிவரும் நடிக்கின்றனர் .இந்த படத்தில் தனுசுக்கு வில்லனாக நடிக்க பிரபல இசையமைப்பாளர் தேவாவிடம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தனுஷே தேவாவை தொடர்பு கொண்டு வில்லனாக நடிக்க அழைப்பு விடுத்திருப்பதாக கூறப்படுகிறது .இது வடசென்னையை மையமாக வைத்து கேங்ஸ்டர் படமாக உருவாகிறது.


தேவாவுக்கு வட சென்னை மக்கள் பாஷையில் நன்றாக பேச வரும் என்பதால் அவரரை தேர்வு செய்துள்ளனர். இந்த படத்தில் தேவா நடிப்பது குறித்து விரைவில் தெரியவரும். படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அக்டோபர் மாதம் முழு படப்பிடிப்பையும் முடித்து விட திட்டமிட்டுள்ளனர். அதன் பிறகு சேகர் கம்முலா இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார்.


SOURCE :DAILY THANTHI



Next Story
கதிர் தொகுப்பு
Trending News