சிம்பு-நயன்தாரா மீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் இணைகிறார்களா..?
சிம்பு-நயன்தாரா மீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் இணைகிறார்களா..?

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் ஆகவும் கதாநாயகியாகவும் வலம் வருபவர்கள் நடிகர் சிம்பு மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவரும் வல்லவன்,இது நம்ம ஆளு ஆகிய வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர்கள்.தற்போது மீண்டும் பிரபல இயக்குனர் ஒருவரின் படத்தில் இருவரும் இணைந்து நடிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை கௌதம் மேனன் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் கௌதம் மேனன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு விண்ணை தாண்டி வருவாயா என்ற சூப்பர்ஹிட் படம் உருவாகியது என்பது குறிப்பிடத்தக்கது.