போலீஸ் வேடத்தில் இந்த கனவு கன்னியா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
அனைவருக்கும் பிடித்தமான நடிகையான காஜல் அகர்வால் போலீஸ் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
By : Karthiga
தனது காதலன் மும்பை தொழிலதிபருமான கௌதம் கிச்சிலி என்பவரை திருமணம் செய்து கொண்டு நீல் என்ற மகனுக்கு தாயான காஜல் அகர்வால் முன்பை விடை இப்போது சினிமாவில் வெப்தொடரிலும் பிஸியாக நடித்து வருகிறார். அவர் பாலகிருஷ்ணாவுடன் தெலுங்கில் நடித்த 'பகவந்த் கேசரி' படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது அவர் நடித்து வரும் தெலுங்கு படம் சத்யபாமா இதில் அவர் சத்யபாமா ஐ.பி.எஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
வைஜெயந்தி ஐ.பி.எஸ் போல் அதிரடி ஆக்ஷன் கலந்த போலீஸ் படமாக உருவாகி வருவதில் நிறைய சண்டை காட்சிகளில் காஜல் அகர்வால் துணிச்சலுடன் நடித்துள்ளார். தெலுங்கில் அவர் நடிக்கும் சோலோ ஹீரோயின் படமான இதை அடுத்து உமா என்ற இந்தி படத்திலும் சோலோ ஹீரோயினாக நடிக்கிறார். கமலஹாசன் உடன் இந்தியன் 2 படத்தில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் சத்யபாமா படத்தின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் சேலை அணிந்து காவல் நிலையம் வரும் காஜல் அகர்வால் லாக்கப்பில் இருக்கும் கைதிகளை கடுமையாக தாக்குகிறார். பிறகு ரெக்கார்டில் கையெழுத்து போட்டுவிட்டு தலைமுடியை அள்ளி முடிந்தபடி செல்கிறார். இதுவரை வெளிப்படுத்தாத மேனரிசங்களை காஜல் அகர்வால் வெளிப்படுத்தி இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.
SOURCE :Dinakaran