நடிகர் விஜய்க்கு இப்படி ஒரு சோதனையா.. காவல் நிலையத்தை நாடிய பரிதாபம்.!
நடிகர் விஜய்க்கு இப்படி ஒரு சோதனையா.. காவல் நிலையத்தை நாடிய பரிதாபம்.!

தனக்கு சொந்தமான வீட்டில் இருந்து 2 பேரை அகற்றக்கோரி நடிகர் விஜய் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் தற்போது அவரது மாஸ்டர் படத்தை வெளியிடும் வேளையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதனால் தன்னுடைய வீட்டில் நடக்கும் பிரச்சனையை கவனிக்காமல் இருந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பட விவகாரம் மற்றும் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், தனக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருந்துவரும் 2 பேரை அப்புறப்படுத்தக்கோரி நடிகர் விஜய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதாவது தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளாக இருந்தபோது ரவிராஜா, ஏசி.குமார் ஆகியோருக்கு வீடு கொடுத்துள்ளார். அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக அவரது மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இருவரும் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் வீடுகளில் இருந்து காலிசெய்ய கூறியுள்ளார். ஆனால் அந்த 2 பேரும் காலிசெய்ய முடியாது என கூறியுள்ளனர். இதனைதொடர்ந்துதான் அவர் காவல் நிலையத்தில் தற்போது புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.