Kathir News
Begin typing your search above and press return to search.

கங்கனா ரணாவத் தனது அடுத்த தமிழ் படத்தில் ஜோடி சேர போகும் நடிகர் இவரா?

நடிகை கங்கனா ரணாவத் அடுத்ததாக புதிய தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

கங்கனா ரணாவத் தனது அடுத்த தமிழ் படத்தில் ஜோடி சேர போகும் நடிகர் இவரா?

KarthigaBy : Karthiga

  |  18 Nov 2023 1:35 PM GMT

நடிகை கங்கனா ரனாவத் ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.இப்படம் சமீபத்தில் வெளியானது. அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'கிரீடம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். அதன்பின்னர் மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி அனைவரையும் கவர்ந்தார்.


தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் 'அச்சம் என்பது இல்லையே- மிஷன் சாப்டர் 1' என்ற படத்தை இயக்கினார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.இந்நிலையில், ஏ.எல்.விஜய்யின் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். மாதவன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கங்கனா ரனாவத் கதாநாயகியாக நடிக்கிறார். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News