Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லன் இவரா?

இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லன் இவரா?
X

KarthigaBy : Karthiga

  |  5 Sept 2023 11:15 PM IST

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய வெற்றியடைந்த இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை டைரக்டர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் படத்தில் இடம்பெறும் நடிகர் கமலஹாசன் காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு விட்டன.

தற்போது சித்தார்த் உள்ளிட்டவர்களின் காட்சிகளை மட்டும் சங்கரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றி இயக்குனர்களாக உருவெடுத்த சிம்பு தேவன் அறிவழகன், வசந்தன், பாலன் உள்ளிட்டோர் படமாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சித்தார்த் காஜல் அகர்வால் , ரகுல் ப்ரீத் சிங்,சமுத்திரகனி ,பாபி சிம்ஹா , பிரியா பவானி சங்கர் , மறைந்த நடிகர்கள் நெடுமுடி வேணு , விவேக், மனோபாலா நடிக்கின்றனர் . இந்தப் படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

Source :News18.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News