சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 169 படத்தில் பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை பணியில் ஈடுபடுவார் என தகவல் கிடைத்துள்ளது.
இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், அனிருத் இசையில் 'சூப்பர்ஸ்டார் 169' படம் தயாராகி வந்தது. இருப்பினும் படத்தின் திரைக்கதையில் திருப்தி ஏற்படாத காரணத்தினால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு விருப்பமான மற்றும் ஆஸ்தான இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமாரிடம் படத்தின் திரைக்கதையை எழுதி கேட்டுள்ளாராம் சூப்பர் ஸ்டார். ரஜினி கேட்டுக் கொண்டதன் காரணமாக 169 திரைக்கதையை தயார் செய்து வருகிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.
'பீஸ்ட்' படத்தில் திரைக்கதையை சரியாக நெல்சன் வடிவமைக்க காரணத்தினாலேயே படக்குழுவினருக்கு இந்த சந்தேகம் வந்து இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.