'வாரிசு' படத்தில் விஜய்யின் மெகா ஹிட் பாடல் ரீமிக்ஸ் - என்ன பாடல் அது?
'வாரிசு' படத்தில் ஏற்கனவே தான் நடித்த படத்தின் பாடலை ஹிட் பாடலை மீண்டும் ரீமேக் செய்ய உள்ளார் விஜய் என தகவல்கள் கிடைத்துள்ளது.

'வாரிசு' படத்தில் ஏற்கனவே தான் நடித்த படத்தின் பாடலை ஹிட் பாடலை மீண்டும் ரீமேக் செய்ய உள்ளார் விஜய் என தகவல்கள் கிடைத்துள்ளது.
இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் 'வாரிசு' என்ற படத்தில் தற்போது விஜய் நடித்து வருகிறார், விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்தில் பாடல்கள் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதில் விஜய் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி டான்ஸ் முக்கியத்துவம் தரும் பாடல் ஒன்றை வைப்பதற்காக இயக்குனர் தரப்பு யோசித்து வருவதால் விஜயின் ஏற்கனவே ஹிட்டான பாடலையை உபயோகப்படுத்த முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது.
அந்த வகையில் 2002 ஆம் ஆண்டு வெளியான யூத் படத்தில் இடம்பெற்று ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த 'ஆல்தோட்ட பூபதி நானடா' என்ற பாடலை வாரிசு படத்தில் ரீமிக்ஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பேச்சுவார்த்தை மற்றும் தயாரிப்பு பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.