Kathir News
Begin typing your search above and press return to search.

ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம்

ஜெயிலர் படம் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக தனது 170 வது படத்தில் நடிக்க இருக்கிறார்.

ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம்
X

KarthigaBy : Karthiga

  |  18 Aug 2023 3:45 PM IST

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயலலிதா படம் திரைக்கு வந்து உலகளவில் 400 கோடிக்கு மேல் வசூல் குவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு இமயமலை சென்று கோவில்களில் வழிபாடு செய்து வந்த ரஜினிகாந்த் ஆன்மிக பயணத்தை முடித்துவிட்டு தனது 170 வது படத்தில் நடிக்க தயாராகி உள்ளார்.இந்த படத்தை சூர்யாவை வைத்து ஜெய் பீம் படத்தை இயக்கி பிரபலமான ஞானவேல் டைரக்டர் செய்கிறார் .


இதில் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் போலி என்கவுண்டர் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் சர்வானந்திடம் பேசி வருகிறார்கள். ஏற்கனவே மகள் ஐஸ்வர்யா இயக்கும், லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. லால் சலாம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News