அதிரடி கதையில் இரு தோற்றங்களில் 'ஜெயம் ரவி'
ஜெயம் ரவி அதிரடியான கதையில் இரு வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் தகவல்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
By : Karthiga
ஜெயம் ரவி 'சைரன்' என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் யோகி பாபு, சமுத்திரகனி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை ஆண்டனி பாக்கியராஜ் டைரக்ட் செய்துள்ளார். படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. டீசரில் ஜெயிலில் இருக்கும் ஜெயம் ரவி பரோலில் வெளியே வருவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.
ஜெயம் ரவியின் கைதி கதாபாத்திரத்தில் ஒரு கதையும் போலீசாக வரும் கீர்த்தி சுரேஷ் குரலில் ஒரு கதையும் என இரண்டு கதாபாத்திரங்களின் கதையை விவரிக்கும் காட்சி டீசரில் உள்ளது. பரபரப்பான திருப்பங்களுடன் மாறுபட்ட கதைக்களத்தில் ஜெயம் ரவியின் வித்தியாசமான தோற்றத்தில் வெளியாகியிருக்கும் இந்த டீசர் படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது.
இந்த படத்தில் ஜெயம் ரவி முதல் முறையாக 'சால்ட் அண்ட் பெப்பர்' தோற்றத்தில் வருகிறார். ஆக்ஷன் திரில்லர் கதையம்சத்தில் உருவாகிறது. ஜெயம் ரவி இதுவரை ஏற்றிறாத இரண்டு விதமான தோற்றங்களில் நடிக்கிறார். யோகி பாபு நகைச்சுவை மட்டுமின்றி கதையுடன் ஒன்றிய வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. விரைவில் திரைக்கு வரவுள்ளது . இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். எஸ்.கே செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
SOURCE :DAILY THANTHI