ஜெயம் ரவி நடித்த பூமி படத்தின் வெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஜெயம் ரவி நடித்த பூமி படத்தின் வெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
By : Amritha J
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இன்னிலையில் இவர் நடித்த பூமி படத்தின் திரைப்படத்தின் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.
எனவே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது திரையங்குகள் திறக்கப்பட்டும் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
இதனால் சூர்யாவின் சூரரைப்போற்று, விஜய்சேதுபதியின் க/பெ ரணசிங்கம் உள்பட ஒருசில முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி நல்ல வசூலை குவித்தன.இந்த நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் லட்சுமண் இயக்கிய 'பூமி' திரைப்படமும் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜெயம் ரவி வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளது:எனது நீண்ட திரைப்பயணம் முழுக்க, முழுக்க ரசிகர்களாகிய உங்களால் ஆனது. நீங்கள் அளித்த அளவற்ற அன்பு என் மேல் நீங்கள் வைத்த மிகப்பெரும் நம்பிக்கை, நீங்கள் அளித்த உத்வேகம் தான், சிறப்பான படங்களில் நான் பணியாற்ற காரணம். எனது கடினமான காலங்களில், என்னை உங்களின் சொந்த ரத்தம் போலவே நினைத்து ஆதரவளித்தீர்கள்.
உங்களின் இந்த ஆதரவே, சினிமா மீதான எனது காதலை நிலைபெற செய்தது. நீங்கள் இல்லாமல், என்னால் இத்தனை தூரம் வெற்றிகரமாக பயணித்திருக்க முடியாது. உங்களை எனது குடும்பத்தினராகவே கருதுகிறேன். "பூமி" திரைப்படம் எனது சினிமா பயணத்தில் ஒரு மைல் கல். இப்படம் எனது திரைப்பயணத்தில் 25 வது படம் என்பதை தாண்டி, என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். கோவிட் -19 காலத்தில் ரிலீஸாகும் படங்களின் வரிசையில் இப்படமும் இணைந்திருக்கிறது.
உங்களுடன் இணைந்து திரையரங்கில் இப்படத்தை ரசிக்க நினைத்தேன், ஆனால் காலம் வேறொரு திட்டம் வைத்திருக்கிறது. இப்படம் உங்கள் இல்லம் தேடி உங்கள் வரவேற்பறைக்கே வரவுள்ளது. டிஸ்னி மற்றும் ஹாஸ்டர் உடன் இணைந்து உங்களின் 2021 பொங்கல் கொண்டாட்டத்தில் பங்குகொள்வதில் நான் பெருமை கொள்கிறேன்.
நிறைய பண்டிகை காலங்களில் திரையரங்கில் வந்து, எனது திரைப்படத்தை பார்த்து, பண்டிகையை கொண்டாடியுள்ளீர்கள். இந்த பொங்கல் பண்டிகை தினத்தில் எனது அழகான திரைப்படத்துடன் உங்கள் விட்டில் உங்களை சந்திப்பதை, ஆசிர்வாதமாக கருதுகிறேன்.
பெரும் அன்புடனும், நிறைய நம்பிக்கையுடனும், என் திரைப்படத்துடன் உங்களை திரையரங்கில் சந்திக்க காத்திருக்கிறேன். கடவுள் நம்மை ஆசிர்வதிக்கட்டும் என ஜெயம் ரவி கூறியுள்ளார்.இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் ரோஹித் ராய், சதீஷ், தம்பி ராமையா, ராதாரவி, சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையில் டட்லி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார் என்பது ஏற்கனவே அறிந்ததே ஆகும்.