Kathir News
Begin typing your search above and press return to search.

மீண்டும் தள்ளிப்போனது ஜெயம் ரவியின் 'அகிலன்' - மீண்டும் எப்போ வெளியீடு?

ஜெயம் ரவியின் 'அகிலன்' திரைப்படம் வெளியீடு தற்போது மீண்டும் தள்ளிப் போய் உள்ளது.

மீண்டும் தள்ளிப்போனது ஜெயம் ரவியின் அகிலன் - மீண்டும் எப்போ வெளியீடு?

Mohan RajBy : Mohan Raj

  |  4 Dec 2022 1:46 PM GMT

ஜெயம் ரவியின் 'அகிலன்' திரைப்படம் வெளியீடு தற்போது மீண்டும் தள்ளிப் போய் உள்ளது.




மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான படம் 'அகிலன்' இப்படம் கடந்த ஆகஸ்ட் மாதமே வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸ் காரணமாக 'அகிலன்' படத்தை கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர்.




தற்பொழுது இந்த திரைப்படம் மேலும் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது, இதற்கு காரணம் படத்தில் இன்னும் பணிகள் மிச்சம் இருப்பதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News