Kathir News
Begin typing your search above and press return to search.

ஜெயம் ரவியின் அடுத்த படம் 'ஜீனி'

ஜெயம் ரவி அடுத்து புதிதாக நடிக்க உள்ள திரைப்படத்திற்கு ஜீனி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஜெயம் ரவியின் அடுத்த படம் ஜீனி

KarthigaBy : Karthiga

  |  14 July 2023 7:00 AM GMT

ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு 'ஜீனி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் கீர்த்தி ஷெட்டி , கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி , தேவயானி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தை அர்ஜுனன் ஜே.ஆர் டைரக்டர் செய்கிறார். இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.


இவர் தயாரிக்கும் 25 - வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு ஏஆர்.ரகுமான் இசையமைக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். அதிரடியான சண்டை காட்சிகளை சர்வதேச சண்டை பயிற்சி பெண் அமைக்கிறார். அதிக பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தை தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தியா என்ற 5 மொழிகளிலும் வெளியிட உள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News