Kathir News
Begin typing your search above and press return to search.

நீதிபதி, முதலமைச்சருக்கு உருக்கமான நன்றி தெரிவிக்கும் திரௌபதி இயக்குனர்.. எதற்காக?

நீதிபதி, முதலமைச்சருக்கு உருக்கமான நன்றி தெரிவிக்கும் திரௌபதி இயக்குனர்.. எதற்காக?

நீதிபதி, முதலமைச்சருக்கு உருக்கமான நன்றி தெரிவிக்கும் திரௌபதி இயக்குனர்.. எதற்காக?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Nov 2020 12:46 PM GMT

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களும் மருத்துவராக படித்து வரமுடியும். இந்த சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில், தமிழகத்தின் முதன்மையான மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் கனவு நனவானதால், அரசு பள்ளி மாணவர்களும், அவர்களின் பெற்றோரும், ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

நேற்று துவங்கிய, முதல் நாள் கவுன்சிலிங்கில், விரும்பிய கல்லூரிகளை தேர்வு செய்து, மாணவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். அதற்கு காரணமான, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தனர். ‘பல தடைகளை கடந்து, இந்த உள் ஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வந்திருப்பதாலும், அதன் வாயிலாக, ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகி இருப்பதாலும், இது மறக்க முடியாத நாள்’ என முதல்வர் உருக்கமாக தெரிவித்தார்.

அரசு ஒதுக்கீட்டில் உள்ள, 313 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 92 பி.டி.எஸ்., இடங்கள் என, 405 இடங்கள், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

முதல் நாளான நேற்று அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அடிப்படையில், அறிவிக்கப்பட்ட தர வரிசையின்படி, 267 மாணவர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். இதற்கான மாணவர் சேர்க்கையை, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். இதில் 18 மாணவர்களுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாணவர் சேர்க்கை ஆணையை வழங்கியதோடு, அவர்களுக்கான உபகரணங்கள் அடங்கிய பெட்டகத்தையும் வழங்கினார்.

இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதற்காக மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும், நீதியரசர் கலையரசன் அவர்களுக்கு திரௌபதி பட இயக்குனர் மோகன் மனதார நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றவர்களை வசதி படைத்தவர்கள் தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தால், அவர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பம் தலைமுறை தலைமுறையாக நன்றி கடன் பட்டிருக்கும் என்று உருக்கமான கோரிக்கையும் வைத்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News