கணவருடன் வந்த காஜல் அகர்வால்.. மாலை அணிவித்து வரவேற்ற சிரஞ்சீவி.!
கணவருடன் வந்த காஜல் அகர்வால்.. மாலை அணிவித்து வரவேற்ற சிரஞ்சீவி.!
By : Kathir Webdesk
தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் நடிகை காஜல் அகர்வால். இவர் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி தனது காதல் கணவர் கௌதம் கிட்சிலுவைத் திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து நடிகை காஜல் இனிமேல் நடிப்பாரா மாட்டாரா என்று ஏகப்பட்ட கேள்விகளை அவரது ரசிகர்கள் எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் ஆச்சார்யா படத்தில் நடிப்பதற்காக நடிகை காஜல் தனது கணவர் கௌதமுடன் வந்தார்.
அப்போது சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி இருவருக்கும் பூங்கொத்தும், மலர் மாலையும் அணிவித்து வரவேற்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், காஜல் அகர்வால் இந்தியன் -2 படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் திரையில் தோன்றுவார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.