Kathir News
Begin typing your search above and press return to search.

அஜித் 62 படத்தில் இணையும் காஜல் அகர்வால்

வருகிற 11ம் தேதி அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் துணிவு படம் வெளியாகவுள்ள நிலையில் ஜனவரி 17ம் தேதி இருந்து அடுத்ததாக விக்னேஷ்சிவன் இயக்கத்தில்

அஜித் 62 படத்தில் இணையும் காஜல் அகர்வால்

Mohan RajBy : Mohan Raj

  |  7 Jan 2023 2:21 PM GMT

வருகிற 11ம் தேதி அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் துணிவு படம் வெளியாகவுள்ள நிலையில் ஜனவரி 17ம் தேதி இருந்து அடுத்ததாக விக்னேஷ்சிவன் இயக்கத்தில் அஜித் 62வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே விசுவாசம் படத்தில் நடித்த நயன்தாராவே இப்படத்தில் கதாநாயகியை நடிப்பதாக கூறப்பட்டது.




ஆனால், திரிஷா அஜித்தின் 62வது படத்தில் நடிக்க இருப்பாக தகவல் வெளியாகின. ஆனால் நடிகை நயன்தாரா இந்த படத்தில் ஹீரோயினுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லாததால் முதலில் நடிக்க மறுத்தார், பிறகு நடிகை த்ரிஷாவும் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.




இதனால் தற்போது அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்த காஜல் அகர்வால் அஜித்தின் 62வது படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தற்போது இந்தியன் 2 படத்தில் கமலுடன் காஜல் அகர்வால் கமலுடன் நடித்து வருகிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News