காஜல் அதிகளவில் படங்களில் கமிட் ஆக என்ன காரணம் ?
Cinema Updates

By : Mohan Raj
"என் கணவர் ஆதரவினால் தான் அதிகமான படங்களில் என்னால் கமிட்டாக முடிகிறது" என காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
தென்னிந்திய அளவில் முதன்மையான நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வால் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்டாலும் தமிழில் இந்தியன்-2, ஹேய் சினாமிகா, கோஷ்டி, கருங்காப்பியம் போன்ற படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வாரங்கல்லில் ஒரு ஷோரூம் திறப்பு விழாவுக்கு வந்திருந்த காஜல் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "இப்படி நான் தொடர்ந்து சினிமாவில் பிசியாக நடித்து வருவதற்கு முதல் காரணமே எனது கணவர் கவுதம் தான். அவரது ஆதரவினால் தான் அதிகமான படங்களில் என்னால் கமிட்டாக முடிகிறது. தொடர்ந்து அவரது ஆதரவினால் சினிமாவில் இன்னும் பெரிய அளவில் சாதிப்பேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது" என்றும் தெரிவித்துள்ளார்.
