காஜல் தானாகவே விலகிவிட்டார் 'ஆச்சாரியா' படத்திலிருந்து - இயக்குனர் கொராடாலா சிவா
Kajal in Acharya film
By : Mohan Raj
காஜல் அகர்வால் அவராகவே ஆச்சார்யா படத்திலிருந்து விலகிவிட்டார் என இயக்குனர் கொராடாலா சிவா கூறியுள்ளார்.
இயக்குனர் கொராடாலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, ராம்சரண் இணைந்து நடித்துள்ள படம் 'ஆச்சாரியா', விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் ராம் சரணுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பதாக இருந்தது. ஆனால் காஜல் அகர்வால் நடிப்பது பற்றிய தகவல்கள் எதையும் படக்குழுவினர் வெளியிடாமல் இருந்தனர். இந்நிலையில் ஆச்சாரியா படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் காஜல் அகர்வால் பெயரை குறிப்பிடாமல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் காஜல் அகர்வால் படத்தில் நடிக்கவில்லை என்பது உறுதியானது.
இதுகுறித்து இயக்குனர் கொராடாலா சிவா தற்பொழுது கூறியிருப்பதாவது, 'காஜல் அகர்வால் இந்த படத்தில் ஒரு பாடலில் நடித்து முடித்துவிட்டார் அதன்பிறகு சில காட்சிகளை படமாக்கிய போது அவர் கர்ப்பம் என்ற தகவலை கூறினார், அதேசமயம் கதைப்படி இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை ஜாலியான கதாபாத்திரம் மட்டுமே இருந்தது ஆகவே அவர் இந்த படத்தில் புரிந்துகொண்டு விலகிவிட்டார்' என கூறியுள்ளார்.