உடல் நலம் தேறியது.. மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்ட கமல்ஹாசன்.!
உடல் நலம் தேறியது.. மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்ட கமல்ஹாசன்.!

நடிகர் கமல்ஹாசனுக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சில வருடங்களுக்கு முன்னர் நடிகர் கமல்ஹாசனுக்கு வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அவர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவும் வாகனத்தில் நின்றவாறு தேர்தல் பிரச்சாரம் செய்தார். இதனால் அவரது காலில் வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறினார். இதனை தொடர்ந்து அவருக்கு வலது காலில் அறுவை சிகிச்சை முடிந்தது. இதன் பின்னர் அவர் சில நாட்கள் மருத்துவர்களின் கணகாணிப்பில் இருந்து வந்த நிலையில், இன்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மருத்துவமனை முன்பாக குவிந்தனர். அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வீட்டுக்கு வழியனுப்பி வைத்தனர்.