Kathir News
Begin typing your search above and press return to search.

கமலின் இந்தியன் 2 பட அறிமுக வீடியோ வெளியீடு- ரசிகர்கள் அமோக வரவேற்பு!

இணையதளத்தில் இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோ ரஜினிகாந்தால் வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் இதை பார்த்து ஏகப்பட்ட மகிழ்ச்சியையும் வரவேற்பையும் கொடுத்துள்ளனர்.

கமலின் இந்தியன் 2 பட அறிமுக வீடியோ வெளியீடு- ரசிகர்கள் அமோக வரவேற்பு!
X

KarthigaBy : Karthiga

  |  4 Nov 2023 12:23 PM IST

சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்த இந்தியன் படம் கடந்த 1996 - இல் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. இதில் கமலஹாசனுடன் சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால் பிரியா பவானி சங்கர் , ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. கமலஹாசனின் பிறந்த நாள் வருகிற ஏழாம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோ நேற்று வலைதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த வீடியோவை தமிழில் ரஜினிகாந்த் வெளியிட்டார்.


இதற்காக கமலஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் அன்பான நண்பர் ரஜினிகாந்துக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தியன் 2 முன்னோட்ட வீடியோவை தெலுங்கில் ராஜமவுலி, இந்தியில் அமீர்கான், கன்னடத்தில் சுதீப் ஆகியோர் வெளியிட்டனர். வீடியோவில் இந்தியாவில் பல துறைகளிலும் லஞ்சமும் ஊழலும் தலைவிரித்து ஆடுவதும் இதனால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதும் காட்சிகளாக இடம் பெற்றுள்ளன .


இந்த அறிமுக டீசரில் ஆரம்பத்தில் "எங்கு தப்பு நடந்தாலும் அங்கு நான் வருவேன் இந்தியனுக்கு சாவே கிடையாது" என்று வயதான தோற்றத்தில் இருக்கும் கமலஹாசன் தொலைபேசியில் பேசும் வசனம் இடம் பெற்று உள்ளது. தொடர்ந்து வேலைக்கு காண்ட்ராக்ட் லஞ்சம் கொடுக்கும் காட்சிகள் உள்ளன. "எங்கும் பணம் குவிந்து கிடைக்கிறது .அநியாயம் பழகிருச்சு எதுவும் இங்கு மாறலையே" என்ற பாடலும் பின்னணியில் ஒலிக்கிறது .இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியன் 2 படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News