Kathir News
Begin typing your search above and press return to search.

ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் கமலின் அடுத்த பான் இந்தியா படத்தில் இத்தனை ஹீரோக்களா?

நடிகர் கமலஹாசன் விக்ரம் படத்தை அடுத்து தற்போது சங்கர் இயக்க இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் கமலின் அடுத்த பான் இந்தியா படத்தில் இத்தனை ஹீரோக்களா?

Mohan RajBy : Mohan Raj

  |  21 Jan 2023 1:59 AM GMT

நடிகர் கமலஹாசன் விக்ரம் படத்தை அடுத்து தற்போது சங்கர் இயக்க இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்து மணிரத்தினம் பா.ரஞ்சித், எச்.வினோத் உள்ளிட்ட பல இயக்குனர்களிடத்தில் கதை கேட்டுள்ளார் நடிகர் கமலஹாசன். இந்நிலையில் கமல் நடிக்கும் அவரது 234 ஆவது படத்தை மணிரத்தினம் இயக்கத்தில் ரெட் ஜெயின் மூவிஸ் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில் 7 மாநிலங்களைச் சார்ந்த பிரபல ஹீரோக்கள் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அந்த பிரபல ஏழு ஹீரோக்களும் ஏற்கனவே ஹேராம் படத்தில் கமலுடன் இணைந்து நடித்த ஷாருக்கானும் ஒருவர். மேலும் இப்படத்தில் இந்த ஏழு மாநில ஹீரோக்களும் கெஸ்ட் ரோலில் நடிக்காமல் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடிக்கிறார்கள்.

ஆதலால் நடிகர் கமல்ஹாசனின் 234 வது படம் ஒரு மெகா பான் இந்தியா படமாக உருவாக இருப்பதாகவும் மற்றும் அப்படத்தின் கதை விவாதத்தில் மணிரத்தினம் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News