எந்த இயக்குநரும் எனக்கு மரியாதை கொடுத்ததில்லை.. கண்ணீர் விட்ட கங்கனா.!
சென்னையில் தலைவி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கண்ணீர் விட்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
By : Thangavelu
சென்னையில் தலைவி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கண்ணீர் விட்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் விதமாக 'தலைவி' படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், தலைவி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கங்னா ரனாவத், அரவிந்த்சாமி, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், இயக்குனர் விஜய் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய கங்னா ரணாவத், தலைவி திரைப்படத்திற்காக என்னை அணுகியபோது, நான் தயங்கினேன். இயக்குனர் விஜய் தன்னை ஒப்புக்கொள்ள வைத்தார். இதன் பின்னர் இப்படத்தில் நடித்தேன். அதோடு பாலிவுட்டில் எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும், நடிகருக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தனக்கு கொடுக்கப்பட்டது.
அதே நேரத்தில் தலைவி படத்தில் இயக்குனர் விஜய் தன்னை மரியாதையுடன் நடத்தினார். எத்தனையோ இயக்குனர்கள் மரியாதை இல்லாமல் நடத்தியுள்ளனர் என கண் கலங்கினார். இவரது பேச்சு மேடையில் இருந்த அனைவரையும் ஒரு நிமிடம் மவுனத்தில் ஆழ்த்தியது.