ஜெயலலிதா நினைவு தினத்தில் தலைவி பட புகைப்படங்களை வெளியிட்ட கங்கனா
ஜெயலலிதா நினைவு தினத்தில் தலைவி பட புகைப்படங்களை வெளியிட்ட கங்கனா
By : Kathir Webdesk
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தமிழகம் முழுவதும் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து தலைவி படம் எடுக்கப்பட்டு வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக கங்கனா ரணாவத் நடித்து வருகின்றார். மேலும், பலர் இத்திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். விரைவில் படத்தின் படப்பிடிப்புகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நினைவு தினத்தை முன்னிட்டு தலைவி படத்தின் கதாநாயகி கங்கனா ரணாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இன்னும் ஒரு வாரத்தில் படப்பிடிப்பு நிறைவடைய இருப்பதாக கங்கனா ரணாவத் குறிப்பிட்டுள்ளார்.