கோரோனாவில் இருந்து மீண்ட கார்த்திக் பட கதாநாயகி!
கோரோனாவில் இருந்து மீண்ட கார்த்திக் பட கதாநாயகி!

தமிழில் கார்த்திக் நடித்த தீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் 'ரகுல் ப்ரீத்தி' சிங். அதன் பிறகு சூர்யா நடித்த என்ஜிகே என பல படங்களில் நடித்தார். எனவே இவர் சமீபத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார் என்றும் மருத்துவர்கள் அவருக்கு தகுந்த சிகிச்சைகளை அளித்து வந்தனர் என்றும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் ரகுல் ப்ரீத்திசிங், கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமாகி விட்டார். அவருக்கு கோவிட் நெகட்டிவ் என்ற ரிசல்ட் வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து ரகுல் ப்ரீத்திசிங் அவரது சமூக வலைத்தளத்தில் தனக்கு கோவிட் பாசிட்டிவ் என்ற ரிசல்ட் வந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நான் தற்போது முழுமையாக குணம் அடைந்து விட்டதாக உணர்கிறேன். எனக்காக வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 2021ஆம் ஆண்டு நல்ல பாசிடிவ் எண்ணத்துடனும் நல்ல உடல்நலத்துடனும் தொடங்க விரும்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமான நடிகை ரகுல் ப்ரீத்தி சிங்கிற்கு ரசிகர்கள் அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Thankyou for all the love ❤️ pic.twitter.com/XwhHtMubKf
— Rakul Singh (@Rakulpreet) December 29, 2020