Kathir News
Begin typing your search above and press return to search.

ரஜினிக்காக உருக்கமான பதிவிட்ட கார்த்திக் சுப்பராஜ்.!

ரஜினிக்காக உருக்கமான பதிவிட்ட கார்த்திக் சுப்பராஜ்.!

ரஜினிக்காக உருக்கமான பதிவிட்ட கார்த்திக் சுப்பராஜ்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Dec 2020 9:44 PM IST

நடிகர் ரஜினிகாந்த் இந்த மாதம் 31ம் தேதி கட்சி ஆரம்பிக்கப்பாடுவர் என அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், இன்று ட்விட்டர் மூலம் தான் அரசியல் கட்சிகள் தொடங்கப்போவதில்லை என அறிவித்திருந்தார். இவரது அறிவிப்புக்கு சினிமா நடிகர்கள் மட்டுமின்றி அவரது லட்சக்கணக்கான ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்நிலையில், நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறியபோது “தலைவா வா தலைவா” என்று வரவேற்ற கார்த்திக் சுப்பராஜ், தற்போது கட்சி தொடங்கவில்லை என்று ரஜினியின் முடிவுக்கு “தலைவா டோன்ட் ஃபீல்” என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “தலைவா .. ப்ளீஸ் மோசமாக உணர வேண்டாம். உங்களைப் போன்ற ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு நாங்கள் தகுதியற்றவர்களாக இருக்கலாம். நீங்கள் எங்களுக்கு முக்கியம் தலைவா. உங்கள் உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள். நாங்கள் எப்போதும் உங்களை நேசிப்போம்” என்று பதிவிட்டு கையெடுத்து கும்பிட்டுள்ளார்.

இவரை போன்று பல சினிமா பிரபலங்களும், தயாரிப்பாளர்கள் மற்றும் சக நடிகர்களும் தங்களது ஆதரவை ரஜினிக்கு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News