சாணிக் காகிதம் படத்தின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்..!
சாணிக் காகிதம் படத்தின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்..!

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது இயக்குனர் செல்வராகவனுடன் 'சாணிக் காகிதம்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்தவகையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் சாணிக் காகிதம் படத்தின் சூட்டிங் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

அந்த புகைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து மாஸ்க் அணிந்தவாறு இருப்பது போன்றும், படக்குழுவில் ஒருவர் காட்சியை விளக்குவது போன்றும் உள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் இந்த பதிவில் நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியிருப்பது: படப்பிடிப்பில் கலந்து கொள்வதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன் என்றும், படப்பிடிப்பு விரைவில் முடிந்து விடும் எனவும், இந்த வருடம் கடைசியில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் கமிட்டாகி உள்ள படங்கள் ரஜினியுடன் அண்ணாத்த படத்திலும் மலையாளம், தெலுங்கு என மொத்தம் 5 படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.