Kathir News
Begin typing your search above and press return to search.

'ரிவால்வர் ரீட்டா'வாக அவதாரம் எடுக்கும் கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு இரண்டிலும் முன்னணி நடிகையாக இருப்பவர்,

ரிவால்வர் ரீட்டாவாக அவதாரம் எடுக்கும் கீர்த்தி சுரேஷ்

Mohan RajBy : Mohan Raj

  |  15 Jan 2023 8:33 AM GMT

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு இரண்டிலும் முன்னணி நடிகையாக இருப்பவர், தமிழில் தற்போது மாமன்னன் படத்தில் உதயநிதியுடனும், தெலுங்கில் நானி உடன் தசரா படங்களில் நடித்துள்ளார்.




இந்த ஆண்டு இந்த இரண்டு படங்களும் திரைக்கு அடுத்தடுத்து வர உள்ளது. இதற்கு அடுத்து தமிழில் சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான முதல் பார்வை போஸ்டரை நடிகை சமந்தா வெளியிட்டார் அதில் கீர்த்தி சுரேஷ் கையில் இரண்டு துப்பாக்கிகளுடன் போஸ் கொடுத்துள்ளார் மற்றும் அதற்கு 'ரிவால்வர் ரீட்டா' என பெயரிடப்பட்டுள்ளது.




இப்படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் பிரவீன் கே எல் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இப்படத்தின் முதல் பார்வையில் கீர்த்தி சுரேஷ் கார்ட்டூன் டைப்லான இமேஜ் லுக் ரசிகர்களை கவர்ந்து உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News