நாட்டில் முதல் முறையாக கேரளா அரசு துவங்கும் புதிய ஓ.டி.டி தளம்
நாட்டிலேயே முதன்முறையாக கேரள மாநில அரசு ஒ.டி.டி தளம் ஒன்றை துவங்க உள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக கேரள மாநில அரசு ஒ.டி.டி தளம் ஒன்றை துவங்க உள்ளது.
தற்பொழுது திரைத்துறையில் வெளிவரும் படங்கள் திரையரங்குகளை மட்டும் நம்பி இருக்க வேண்டிய அவசியமில்லை, ஓ.டி.டி என்ற இணையதளம் மூலமாக அனைத்து படங்களும் காலதாமதமின்றி வெளியாகி ரசிகர்களுக்கு சென்று சேரும்படி வாய்ப்பு அமைந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட படங்கள் கூட ரசிகர்களிடம் சரியான இடத்தில் சென்று சேர்வதால் பல தயாரிப்பாளர்கள் இதனால் பலனடைந்துள்ளனர். இந்த நிலையில் நாட்டிலேயே முதன்முறையாக கேரளா அரசு பிரத்தியோக ஓ.டி.டி தளத்தை வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் துவங்குகிறது.
இதுகுறித்து கேரள மாநில கலாச்சாரம் மற்றும் சினிமா துறை அமைச்சர் சாஜி செரியன் கூறியதாவது, 'இந்த ஓ.டி.டி தளத்திற்கு சி ஸ்பேஸ் என்ற பெயரிட்டுள்ளோம். இது மாநில அரசின் கலை கலாச்சாரம் சினிமா துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும். கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழக நிர்வாகிகள் இதனை நிர்வகிப்பார்கள். திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகும் பின்பு வெளியிடப்படும் தயாரிப்பாளர்கள் கடுகளவு கூட பிரச்சினையை சந்திக்க கூடாது என்ற காரணத்தினால் அனைவருக்கும் ஒரு மேடை கிடைக்க வேண்டுமென்ற காரணத்தினால் துவங்கப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.