லேடி சூப்பர் ஸ்டாரின் புத்தாண்டு தின கொண்டாட்டம் - வைரலாகும் புகைப்படம்!
லேடி சூப்பர் ஸ்டாரின் புத்தாண்டு தின கொண்டாட்டம் - வைரலாகும் புகைப்படம்!
By : Amritha J
தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை நயன்தாரா. இதனால் ரசிகர்கள் அனைவராலும் இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.
எனவே இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடும் விதமாக உலகம் முழுவதும் உள்ள பொது மக்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக திரையுலக பிரபலங்கள் பலர் தங்களுடைய சமூக வலைதளங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்த புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடியும் இன்றைய புத்தாண்டை சிறப்பாக கொண்டாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாராவுடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களை விக்னேஷ் சிவன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் அதில் அவர் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இப்போது நாம் வாழ்க்கையில் ஒரு மறக்கமுடியாத கட்டத்தை கடந்து விட்டோம்.
அதேபோல் மறக்கமுடியாத 2021ஆம் ஆண்டை நோக்கி முன்னேறுவோம். சிறந்த தருணங்கள், வெற்றி, மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், அமைதி, திருப்தி மற்றும் அன்பு ஆகியவற்றுடன் இந்த அற்புதமான 2021-ஐ நோக்கி செல்லும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். விக்னேஷ் சிவனின் வாழ்த்துக்களும் நயன்தாராவுடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.