Kathir News
Begin typing your search above and press return to search.

மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்கும் தல - பரபரக்கும் ஏ.கே-62 காஸ்டிங்

அஜித் குமார் துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் மற்றும் லைக்கா

மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்கும் தல - பரபரக்கும் ஏ.கே-62 காஸ்டிங்

Mohan RajBy : Mohan Raj

  |  22 Jan 2023 8:36 AM GMT

அஜித் குமார் துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் மற்றும் லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. அஜித்தின் 62 ஆவது படத்தில் நாயகியாக திரிஷா நடிப்பதாக கூறப்பட்ட வந்த நிலையில் ஏற்கனவே ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக தகவல்கள் வெளியாகிறது.

விக்னேஷ் சிவன் இதுவரையில் காதல் சம்பந்தப்பட்ட கதைகளையே படமாக்கி வந்துள்ளார் ஆனால் இப்படத்தில் ஆக்ஷன் கலந்த ஒரு கதையை படமாக்க போகிறார். தற்போது இன்னொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் இப்படத்தின் வில்லனாக அரவிந்த்சாமியும் காமெடியாக நடிப்பதற்கு சந்தானம் மீண்டும் கமிட் ஆகி இருப்பது அஜித் 62 ஆவது படம் ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமாக தயாராக இருப்பதை உறுதி செய்துள்ளது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News