ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'ருத்ரன்' படத்தில் இணைந்த முன்னணி நடிகர்!
ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'ருத்ரன்' படத்தில் இணைந்த முன்னணி நடிகர்!
By : Amritha J
தமிழ் சினிமாவில் பல படங்கள் நடித்த தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். அந்த வகையில் பேய் படங்களை காமெடியாக எடுக்க முடியும் என்று பல படங்களை எடுத்துக் காட்டியவர்.
தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் படம் "ருத்ரன்". இந்த படத்தின் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாகவும், ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் எனவும், ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ருத்ரன் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடக்க இருப்பதாகவும்,படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்புகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனவே ருத்ரன் படத்தில் பிரபல முன்னணி நடிகரான சரத்குமார் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா திரைப்படத்தில் சரத்குமார் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது அறிந்ததே. அதன் பின்னர் மீண்டும் ஒன்று சேர்ந்து நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Happy to welcome the one and only @realsarathkumar sir onboard for #Rudhran #ருத்ரன் @offl_Lawrence @5starkathir @priya_Bshankar @RDRajasekar @gvprakash @5starcreationss @venkatjashu @prosathish pic.twitter.com/796RRNHEkv
— Fivestar Creations LLP (@5starcreationss) February 5, 2021