லியோ'வில் விஜய்க்கு தந்தை கதாபாத்திரத்தில் நடிப்பதும் இவர்தானா?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது . இது பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ ' படத்தின் காட்சிகள் வேகமாக எடுக்கப்பட்டு வருகிறது. 'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி விஜய் இணையும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.
ஏற்கனவே தளபதி நடிப்பில் வெளியான 'வாரிசு' மற்றும் 'பீஸ்ட்' திரைப்படங்கள் வசூல் ரீதியாக சுமாரான கலெக்ஷன் பெற்றிருந்த போதிலும் விமர்சன ரீதியாக விஜய்க்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை .எனவே அடுத்து வரக்கூடிய லீவு படத்தை எப்படியும் வெற்றி படமாக்க வேண்டும் என்ற தீவிரமான முடிவில் அதிக உழைப்பில் ஈடுபட்டுள்ளார் தளபதி விஜய்.
லியோ படம் ஒரு கேங்ஸ்டர் படம் என்பது அனைவரும் அறிந்ததே இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், மன்சூர் அலிகான் , மிஷ்கின் போன்ற ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .அதோட கூடுதல் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் கேங்ஸ்டர் ஆக மட்டுமின்றி விஜய்க்கு தந்தையாகவும் அவரே நடிக்கிறார் என்பது தான் அந்த தகவல்.