கீர்த்தி ஷெட்டிக்கு நடிக்க தெரியவில்லை என 'டோஸ்' விட்ட லிங்குசாமி !

இயக்குனர் லிங்குசாமியிடம் சகட்டுமேனிக்கு திட்டு வாங்கியுள்ளார் நடிகை கீர்த்தி ஷெட்டி.
தெலுங்கு சினிமாவில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளிவந்த 'உப்பெனா' படத்தில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி, முதல் படத்திலேயே இந்தளவிற்கு அதிக ரசிகர் பட்டாளத்தை எட்டியது சமீபத்தில் இவர் மட்டுமே. இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் கீர்த்தி ஷெட்டி.
இப்படத்தின் படப்பிடிப்பில் ஒரு உணர்வுவூர்மான காட்சி படமாக்கப்பட்டதாம். அந்தக் காட்சியில் லிங்குசாமி எதிர்பார்த்த அளவிற்கு கீர்த்தி ஷெட்டி நடிக்கவில்லையாம். பல டேக்குகள் வாங்கியும் அவரது நடிப்பு திருப்திப்படுத்தாத காரணத்தால் அனைவர் முன்னிலையிலும் கீர்த்தி சத்தம் போட்டு திட்டிவிட்டாராம் இயக்குனர் லிங்குசாமி. இதனால் அழுதுகொண்டே கேரவானுக்கு சென்றார் கீர்த்தி ஷெட்டி.