சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தற்கொலையே.. பிரேத பரிசோதனையில் தகவல்.!
சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தற்கொலையே.. பிரேத பரிசோதனையில் தகவல்.!
By : Kathir Webdesk
நடிகை சித்ரா மரணம் தற்கொலை தான் என பிரேத பரிசோதனை முடிவில் வெளியாகியுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
இதனையடுத்து அவரது உடல் சென்னை நசரத் பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது. அவரது கன்னத்தில் காயம் இருந்ததால் ஒரு வேளை தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதே சமயம் சித்ராவின் தாய், அவர் கணவர் ஹேமந்த்தான் அடித்து கொன்று விட்டதாகவும் கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து சித்ராவின் உடல் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டதாக காவல் துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் முதல்கட்ட தகவலின் அடிப்படையில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இருப்பினும் அவரை தற்கொலைக்கு தூண்டியது யார் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.