ரஜினி, கமல் இருவரையும் இணைக்கும் லோகேஷ் கனகராஜ் - 'விக்ரம் 2'வா அது?
ரஜினி, கமல் ஆகிய இருவரையும் வைத்து லோகேஷ் கனகராஜ் படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஜினி, கமல் ஆகிய இருவரையும் வைத்து லோகேஷ் கனகராஜ் படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
'மாநகரம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அடுத்தபடியாக 'கைதி' என்ற திரைப்படத்தை இயக்கி திரையுலகத்தை திரும்பி பார்க்க வைத்தார். மேலும் விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் இயக்கம் மூலம் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்தபடியாக விக்ரம் திரைப்படத்தில் தமிழ் சினிமாவை கலெக்ஷனில் அடுத்த கட்ட உயரத்திற்கு எடுத்துச் சென்றார்.
இந்நிலையில் தற்பொழுது தமிழ் சினிமாவின் முதன்மை இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜ் ஒருவர் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரையும் வைத்து இருவருக்கும் சரி நிகரான கதைக்களம் ஒன்றை லோகேஷ் கனகராஜ் தயார் செய்து வைத்துள்ளதாகவும் இதற்கு இருவரும் சம்மதித்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது உருவாகும் பட்சத்தில் ரஜினி கமல் இணைவிருக்கும் மிக பிரம்மாண்ட படம் இதுவாக இருக்கும்.