Kathir News
Begin typing your search above and press return to search.

'லவ் டுடே' செம்ம படம் - நிதி அகர்வாலை ஈர்த்த பிரதீப் ரங்கநாதன்

என்னைப் பற்றி வரும் நெகட்டிவான செய்திகளை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என நிதி அகர்வால் கூறியுள்ளார்.

லவ் டுடே செம்ம படம் - நிதி அகர்வாலை ஈர்த்த பிரதீப் ரங்கநாதன்

Mohan RajBy : Mohan Raj

  |  20 Nov 2022 1:58 PM GMT

என்னைப் பற்றி வரும் நெகட்டிவான செய்திகளை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என நிதி அகர்வால் கூறியுள்ளார்.




சமீபத்தில் நிதி அகர்வால் உதயநிதியுடன் அவர்கள் நடித்த 'கலக தலைவன்' படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்நிலையில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் நிதி அகர்வால் கூறியதாவது, 'என்னைப் பற்றி செய்தி வந்தால் அம்மா, அப்பாவுக்கு ஒரு தானே பதில் சொல்லணும். இப்போது நான் அதை எல்லாம் பெருசா எடுத்துக்கிறது இல்லை.




என்னைப் பற்றி நான் எதுவும் செய்தி கொடுப்பதும் இல்லை, மாறாக என்னைப் பற்றி வரும் நெகட்டிவ் செய்திகளை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதும் இல்லை. சமூக வலைதளங்கள் ரொம்ப பிடிக்கும், அதனால் அடிக்கடி நான் எடுக்கும் புகைப்படங்களை அதில் பதிவிடுவேன். அதனால் வரும் செய்திகளை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. சமீபத்தில் 'லவ் டுடே' படம் பார்த்தேன் ரொம்ப பிடித்திருக்கிறது நல்ல பொழுதுபோக்கு படம்' எனவும் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News