விஞ்ஞானி நம்பி குடும்பத்துடன் ராக்கெட்ரி வெற்றியை கொண்டாடிய மாதவன்
'ராக்கெட்ரி நம்பி நாராயணன் விளைவு' படத்தின் வெற்றியை மாதவன் விஞ்ஞானி நம்பி குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.

By : Mohan Raj
'ராக்கெட்ரி நம்பி நாராயணன் விளைவு' படத்தின் வெற்றியை மாதவன் விஞ்ஞானி நம்பி குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.
இந்திய விண்வெளி விஞ்ஞான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து மாதவன் இயக்கி, நடித்து வெளிவந்த படம் 'ராக்கெட் நம்பி விளைவு', படம் வெளியாகி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் அனைத்து பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு இது சமுதாயத்திற்கு அவசியமான படம் அனைத்து மாணவ மாணவிகளும் பார்க்க வேண்டும் என கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.
இந்த நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நடிகர் மாதவன் நம்பி நாராயணன் குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தற்பொழுது இதன் புகைப்படத்தை வெளியிட்டு நம்பி அவரது குடும்பத்தாரையும் பற்றி நன்றாக அறிந்தவர்களுக்கு மட்டுமே இந்த புகைப்படத்தில் உண்மையான அர்த்தம் விளங்கும் என குறிப்பிட்டது இணையங்களில் வைரலாகி வருகிறது.
