விமர்சனம் செய்த ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்த மாதவன்!
விமர்சனம் செய்த ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்த மாதவன்!

தமிழ் சினிமாவில் அதிக ரசிகைகளின் மனதை வென்றவர் நடிகர் மாதவன். எனவே தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட் திரை உலகிலும் பிரபல நடிகராக இருப்பவர்.எனவே சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமித்சாத் என்பவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். இந்த பதிவுக்கு பெரும்பான்மையானோர் பாராட்டு தெரிவித்த நிலையில் ஒரு ரசிகர் மட்டும் மாதவனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அதில் ரசிகர் கூறுவது: தயவுசெய்து மருத்துவரை பாருங்கள் என்று நடிகர் ஒருவர் அட்வைஸ் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு காலத்தில் இந்தி திரையுலகில் மாதவன் நுழைந்த போது மிகவும் எனது விருப்பத்திற்குரிய நடிகராக அவர் இருந்தார்.
அவரை நான் மிகவும் ரசித்தேன். ஆனால் இப்போது அவர் கண்களையும் முகத்தையும் பார்க்கும்போது அவர் மதுப்பழக்கத்தால் தன்னைத்தானே அழித்துக் கொண்டிருப்பது போல் தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவருடைய சினிமா வாழ்க்கையையும் ஆரோக்கியத்தையும் போதை பழக்கத்தால் அழித்து கொள்வதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்

ரசிகரின் இந்த கமெண்டுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மாதவன் பதிலடியாக இதையெல்லாம் நீங்கள் கண்டுபிடித்து உள்ளீர்களா உங்கள் பெற்றோரை நினைக்கும்போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. தயவுசெய்து நீங்கள் ஒரு நல்ல மருத்துவரை அவசியம் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். மாதவனின் இந்த பதிலடி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.