'பொன்னியின் செல்வன்'வனை இதுவரை படமாக்க முயன்றவர்கள் இத்தனை பேரா?
மணிரத்னம் இயக்கத்தில் வரவிருக்கும் திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' கதையை இதுவரை தமிழ்சினிமாவில் நிறைய பேர் முயற்சி செய்தனர், அவர்கள் யார் என்பதை பார்க்கலாம்.

மணிரத்னம் இயக்கத்தில் வரவிருக்கும் திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' கதையை இதுவரை தமிழ்சினிமாவில் நிறைய பேர் முயற்சி செய்தனர், அவர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
முதலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இதனை முதலில் முயற்சி செய்தார், எப்படியாவது இந்த படத்தை எடுத்துவிடவேண்டும் என முயன்றார், நாடோடி மன்னன் திரைப்படம் முடித்தவுடன் இதற்கான முயற்சியை ஆரமித்தார் ஆனால் அது ஏனோ கை கூடவில்லை.
பின்னர் சிவாஜி கணேசன் முயன்றார், ஆனால் அது நிறைவேறாமல் தான் 'ராஜராஜ சோழன்' திரைப்படத்தை எடுத்தார்.
பின்னர் 1980'களில் கமல் மற்றும் சுஜாதா ஆகிய இருவரும் முயற்சித்தனர், கமல் இதற்காக நிறைய வேலைகள் செய்தார், படத்தை விரைவில் துவங்க முயற்சித்தார். ஆனால் இந்த திரைப்படம் ஏனோ தொடங்க நேரம் கைகூடவில்லை.
பின்னர் 90'களின் இறுதியில் தியாகராஜன், பிரசாந்தை வைத்து சன் டி.வி'யில் தொடராக இதனை தயாரிக்கலாம் என முடிவு செய்தார். நடிகர், நடிகை தேவை என விளம்பரம் கூட செய்யப்பட்டது. ஆனால் அது நிறைவேறவே இல்லை.
பின்னர் 2010'வருடங்களில் மணிரத்னம் விஜய் மற்றும் மகேஷ் பாபு'வை வைத்து 'பொன்னியின் செல்வ'னை முயற்சித்தார். விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என செய்திகள் அடிபட்டன மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ப்ராஜெக்ட் கைகூடாமலே கனவாக போனது.
இந்த முயற்சிகள் அனைத்திற்கும் தயாரிப்பு செலவு, நட்சத்திரங்கள் தேர்வு, தயாரிப்பாளர், படப்பிடிப்பு லொகேஷன்'கள் இன்ன பிற விஷயங்கள் கைகூடாமல் போனதற்கு காரணமாக கூறப்பட்டது. ஆனால் தற்பொழுது இது மணிரத்னம் மூலம் நிறைவேறி திரைக்கு வரவிருக்கிறது.