Kathir News
Begin typing your search above and press return to search.

மஞ்சு வாரியாரின் பாடகி அவதாரம் - ஜிப்ரான் இசையில் 'துணிவு' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

'துணிவு' படத்திற்காக ஜிப்ரான் இசையில் நடிகை மஞ்சு வாரியார் ஒரு பாடலை பாடியுள்ளார்.

மஞ்சு வாரியாரின் பாடகி அவதாரம் - ஜிப்ரான் இசையில் துணிவு படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Mohan RajBy : Mohan Raj

  |  28 Nov 2022 1:58 AM GMT

'துணிவு' படத்திற்காக ஜிப்ரான் இசையில் நடிகை மஞ்சு வாரியார் ஒரு பாடலை பாடியுள்ளார்.




இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'துணிவு', உண்மை சம்பவத்தை வைத்து உருவாகி வரும் இப்படத்தில் மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடித்துள்ளார். வங்கி கொள்ளை தொடர்பாக கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் அஜித் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.




தற்போது படத்தின் இறுதி கட்டப் பணிகள் மற்றும் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகி உள்ள நிலையில் நடிகை மஞ்சு வாரியார் ஒரு பாடலை பாடியுள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்த தகவலை புகைப்படங்களுடன் அவரே பகிர்ந்துள்ளார். 'இப்படத்தில் சுவாரஸ்யமான ஒரு பாடல் பாடியது மகிழ்ச்சி, இந்த பாடலை ரசிகர்களுடன் கேட்க ஆர்வமாக உள்ளேன்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News