"மருதநாயகம் 5 நிமிடமாவது வெளிடுங்கள் அப்பதான் பான்-இந்தியா படம்'னா என்னனு தெரியும்' - கமலிடம் வேண்டுகோள் விடுத்த சிம்பு
மருதநாயகம் படம் தொடர்பாக விக்ரம் பட பாடல் வெளியீட்டு விழாவில் சிம்பு கமலிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மருதநாயகம் படம் தொடர்பாக விக்ரம் பட பாடல் வெளியீட்டு விழாவில் சிம்பு கமலிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பாஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'விக்ரம்', இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய நடிகர் சிம்பு மருதநாயகம் பற்றி கூறினார்.
அப்போது பேசிய நடிகர் சிம்பு கூறியதாவது, 'கமல் 50 விழா இங்குதான் நடந்தது அதில் நானும் பங்கேற்றேன் அந்த விழாவில் பேச நினைத்தேன் ஆனால் அது நடக்கவில்லை. இப்பொழுது வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி என்ன இந்த நிகழ்ச்சி கிடைத்ததற்காக நன்றி கமல் சார் எனக்கு on-screen குரு இன்றைக்கு எல்லோரும் பான்-இந்தியா என்று பேசுகிறார்கள் கமல் சார் தயவு செய்து உங்கள் மருதநாயகம் படத்தை ஒரு ஐந்து நிமிடமாவது ரிலீஸ் பண்ணுங்க அப்போது தான் தெரியும் எல்லாருக்கும் தெரியும் உங்கள் உழைப்பின் அருமை' என பேசினார்.