மாஸ்டர் படம் மூன்றே நாளில் செய்த சாதனை வசூல்: எவ்வளவு தெரியுமா?
மாஸ்டர் படம் மூன்றே நாளில் செய்த சாதனை வசூல்: எவ்வளவு தெரியுமா?
By : Amritha J
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது மாஸ்டர் படம் கடந்த 13-ம் தேதி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு பெரும்பாலான விமர்சனங்களும், மற்றும் ஊடகங்கள் பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்து உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது மாஸ்டர் படத்தின் 3 நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. மூன்றே நாட்களில் இந்த படம் உலகம் முழுவதும் 102 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் 52 கோடி வசூல் செய்துள்ளதாகவும், கேரளாவில் ரூ.5 கோடி, கர்நாடகாவில் ரூ.10 கோடி, ஆந்திராவில் ரூ.14 கோடி, வட இந்தியாவில் ரூ.3 கோடி மற்றும் வெளிநாடுகளில் இந்த படம் ரூ.18 கோடி வசூல் செய்து உள்ளது.
தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வழக்கம்போல் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் இந்த வசூல் விவரங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.