அமேசனானில் சென்சார் கட் இல்லாத மாஸ்டர் திரைப்படம்! படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவா..?
அமேசனானில் சென்சார் கட் இல்லாத மாஸ்டர் திரைப்படம்! படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவா..?

By : Amritha J
தளபதி விஜய் நடித்த ரசிகர் அனைவராலும் கவரப்பட்ட படம் மாஸ்டர். இப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13-ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. வெளியான 10 நாட்களில் சென்னையில் மட்டும் 8 கோடி, தமிழகத்தில் மொத்தம் ரூபாய் 105 கோடி வசூல்,உலக அளவிலான வசூல் ரூபாய் 205 கோடி என்று தகவல்கள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் மட்டுமில்லாமல் கர்நாடகாவில் ரூபாய் 17 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ரூபாய் 24 கோடியும்,கேரளாவில் ரூபாய் 12கோடியும், வெளிநாடுகளில் ரூபாய் 45 கோடியும்,வட இந்தியாவில் ரூபாய் 4 கோடியும் வசூல் சாதனையை பெற்றுள்ளது.
இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி 16-நாட்களில் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் நாளை இந்த திரைப்படம் அமேசான் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. எனவே தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி அமேசானில் வெளியாகும் 'மாஸ்டர்' திரைப்படம் சென்சார் கட் இல்லாத படமாக வெளியாகும் என்று கூறப்படுகிறது.
'மாஸ்டர்' படத்தில் இடம்பெற்ற ஒரு சில சர்ச்சைக்குரிய காட்சிகள் சென்சாரில் கட் செய்யப்பட்ட நிலையில் அந்த காட்சிகள் உடன் கூடிய மாஸ்டர் திரைப்படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் அமேசானில் பார்க்க முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அந்த வகையில் ஏற்கனவே மாஸ்டர் திரைப்படம் மூன்று மணி நேரம் ரன்னிங் டைம் என்ற நிலையில் சென்சார் கட் இல்லாததால் மேலும் சில மணி நேரம் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
