சந்திக்கும் காந்தி - கோட்ஸே | சர்ச்சையை கிளப்பும் சினிமா
காந்தியை கோட்சே சுட்டுக் கொண்டதை மையமாக வைத்து பல படங்கள் வெளிவந்துள்ளன.
By : Mohan Raj
காந்தியை கோட்சே சுட்டுக் கொண்டதை மையமாக வைத்து பல படங்கள் வெளிவந்துள்ளன. காந்தி கோட்சே ஏக் யூத் ஹிந்தியில் புதிதாக தயாராகி உள்ளது ஒரு படம். கமல் தயாரித்து நடித்த ஹே ராம் என்பது மற்றொரு படம்.
இப்படத்தில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் காந்தி உயிர் பிழைத்துக் கொள்கிறார் பின்னர் அவர் சிறையில் இருக்கும் கோட் சே-வை சந்திக்கிறார் காந்தி - கோட்சே இடையிலான யுத்தமும் சுதந்திர இந்தியாவின் காந்தி எதிர்ப்புகளும் புதிரான சவால்களாக சற்று வித்தியாசத்துடன் இருப்பதே இந்த படத்தின் கதையாகும்.
படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷி இயக்கியுள்ளார். தீபக் அந்தாணி காந்தியாகவும் சின்மை மன்ட் லேகர் கோட்சே - வாகவும் நடித்துள்ளனர். ஜனவரி 26 ஆம் தேதி படம் வெளியாகிறது. பி.வி.ஆர் பிக்சர் படத்தை வெளியிடுகிறது மற்றும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு செய்கிறார்.