Kathir News
Begin typing your search above and press return to search.

மீண்டும் பாண்டஸி படத்தில் மோகன்லால்

நான்கு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் 'புலி முருகன்' படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

மீண்டும் பாண்டஸி படத்தில் மோகன்லால்

Mohan RajBy : Mohan Raj

  |  19 Jan 2023 2:13 PM GMT

நான்கு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் 'புலி முருகன்' படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படம் வழக்கமான படங்களில் இருந்து சற்று மாறுபட்டு ஃபேண்டஸி படமாக புலிக்கும் மனிதனுக்கும் உண்டான பகை என்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது.

இப்படத்திற்குப் பிறகு அப்படி ஒரு படம் மோகன்லால் இடமிருந்து எப்போது வரும் என எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தில் கௌபாய் கதையம்சம் கொண்ட நாயகனாக மோகன்லால் நடிக்கிறார்.

இயக்குனர் லிஜோ ஜோஸ் 'அங்கமாலி டைரிஸ்', 'ஜல்லிக்கட்டு' உள்ளிட்ட சில மலையாள படங்கள் மூலமாக குறுகிய காலத்தில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர். இவரே மோகன்லால் படத்தை இயக்குகிறார்.

கோல்டன் சிட்டி என்று அழைக்கப்படும் ஜெய் சல்மரில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கி உள்ளது. இந்நிலையில் மோகன்லால் படத்திற்கு முன்னதாக லிஜோ ஜோஸ் பள்ளிச்சேரி இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படம் நாளை வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News