மோகன்லாலின் 'அலோன்' திரைப்படம் - ஒற்றை கதாபாத்திர கதையா?
மோகன்லால் 'அலோன்' படம் திரையரங்கிலா அல்லது ஓ.டி.டி தளத்திலா எதில் வெளியாகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மோகன்லால் 'அலோன்' படம் திரையரங்கிலா அல்லது ஓ.டி.டி தளத்திலா எதில் வெளியாகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
திரையுலகில் குறிப்பாக மலையாள திரையுலகில் படங்கள் நிறைய வெளியீட்டிற்கு காத்திருக்கின்றன, கொரோனா காலம் முடிந்ததும் சில படங்கள் ஓ.டி.டி'யில் வெளியாகின்றன! சில படங்கள் திரையரங்குகளில் வெளியிடுகின்றனர் இந்தநிலையில் மோகன்லால் நடித்த 'திரிஷ்யம்' படம் திரையில் வெளியாகாமல் ஓ.டி.டி தளத்தில் வெளியானது 'ஆராட்டு' திரையில் வெளியானது இந்த இரு படங்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்த சூழலில் மோகன்லால் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் படம் 'அலோன்', நீண்ட நாளைக்கு பிறகு இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தை திரையரங்கில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்த நிலையில் இந்த படம் ஓ.டி.டி தளத்தில் தான் வெளியாக இருக்கிறது என இயக்குனர் கூறியுள்ளார் இயக்குனர் ஷாஜி கைலாஷ். படத்தின் டைட்டலில் கூறியபடி மோகன்லால் மட்டுமே நடித்திருக்கும் படம் இது திரையரங்குகளில் பெரிய வரவேற்பு கிடைக்காது' எனவும் கூறியுள்ளார்.