தாவூத் இப்ராஹிம் பற்றி மேலும் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்
தாவூத் இப்ராகிம் ஒவ்வொரு மாதமும் உறவினர்களுக்கு எவ்வளவு பணம் அனுப்புகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தாவூத் இப்ராகிம் ஒவ்வொரு மாதமும் உறவினர்களுக்கு எவ்வளவு பணம் அனுப்புகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் தாவுத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறான் எனவும் தன் கூட்டாளிகளை மும்பை ஹவாலா ஆப்பரேட்டர்கள் ஆகவும் போதைப் பொருள் கடத்துபவர்கள் ஆகவும் இருக்கின்றனர் என அமலாக்கப்பிரிவு சமீபத்தில் தகவல் தெரிவித்தது.
மேலும் தாவூத் இப்ராஹிம் சகோதரர் இக்பால் கேஷ்கார் என்பவரிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தியது. அப்போது காலித் உஸ்மான் மூத்த சகோதரர் அப்துல் சமத் கடந்த 1990ஆம் ஆண்டு கூட்டாளிகளுக்குகள் இடையே நடந்த சண்டையில் கொல்லப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.
காலித் உஸ்மான் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் உடன் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், 'என் சகோதரன் அப்துல் சமத் மற்றும் இக்பால் கஸ்கர் இருவரும் சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். 1990 ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி அருள் தாவூத் இப்ராஹிம் கூட்டத்தினர் மத்தியில் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்.
என் சகோதரன் மூலமாக தாவூத் இப்ராஹிம் தனது சகோதர, சகோதரிகள் மற்றும் உறவினர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 10லட்சத்தைத் ஆட்கள் மூலம் அனுப்பி வைக்கிறான் எனவும் தெரிவித்தார். மேலும் எங்களது பகுதியில் வசிக்கும் சலீம் பட்டேல் என்பவர் தாவூத் சகோதரிக்கு டிரைவராக இருந்தார். அவர் தாவூத் சகோதரியுடன் சேர்ந்து கொண்டு தாவூத் பெயரை பயன்படுத்தி நிலத்தை அபகரித்தல், மிரட்டி பணம் பறித்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார் எனவும் தெரிவித்தார்.