இசைபுயல் ஏஆர் ரஹ்மானின் தாயார் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி.!
இசைபுயல் ஏஆர் ரஹ்மானின் தாயார் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி.!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது தயார் கரீமா பேகம் மீது மிகுந்த பாசம் உடையவர். தான் பள்ளிப்பருவத்தில் இருந்தபோதே தனக்கான மேடை கல்வி அல்ல இசைதான் என ரஹ்மானை தெளிவுபடுத்தியதே அவரது தாயார் தானம். இந்நிலையில் ஈடுகட்ட முடியாத தாயாரின் இழப்பு ரஹ்மானுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஹ்மான் தனது 9 வயதில் அவரது தந்தையை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரையிசையின் முகம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இரண்டு ஆஸ்கர் விருதுகள் வென்று இந்தியாவை நோக்கி உலகின் பார்வையைத் திருப்பியவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.
எப்போதுமே தனது அம்மாவைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார். உலகத்தில் எங்கும் சுற்றினாலும், அம்மாவைத் தேடி வருவதை 50 வயதிலும் தவிர்த்தது இல்லை என்றே சொல்லலாம்.