மிஷ்கினின் 'பிசாசு 2' முதல் பார்வை ரிலீஸ், ரசிகர்கள் மகிழ்ச்சி !
பிசாசு படத்தின் முதல் பார்வையை இயக்குனர் மிஷ்கின் வெளியிட்டார்

வெளியானது 'பிசாசு 2' படத்தின் முதல் பார்வை.
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்க கடந்த 2014-ம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே கூறினார் இயக்குனர் மிஷ்கின். பின்னர் நடிகை ஆண்ட்ரியாவை வைத்து 'பிசாசு 2' படத்தை துவங்கிவிட்டதாக இயக்குனர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ட்ரியா மட்டுமின்றி விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க 'பிசாசு 2' படம் தயாராகி வருகிறது.
இந்நிலையில் நேற்று பிசாசு படத்தின் முதல் பார்வையை இயக்குனர் மிஷ்கின் வெளியிட்டார். கையில் சிகரெட் புகைந்து கொண்டிருக்கையில் ஒரு பெண் குளியல் தொட்டியில் படுத்திருப்பது போன்ற படத்தை முதல் பார்வையாக 'பிசாசு 2' படத்திற்காக இயக்குனர் மிஷ்கின் வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பலதரப்பட்ட விமர்சனங்கள் ரிலீஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி
சௌர்ஸ் : Dinamalar சினிமா
பிக் சௌர்ஸ் : நக்கீரன்