நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் பார்ட்-2 கண்டிப்பாக உண்டு - ஆர்.ஜே பாலாஜி பேட்டி..!
நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் பார்ட்-2 கண்டிப்பாக உண்டு - ஆர்.ஜே பாலாஜி பேட்டி..!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா.ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வெளிவந்த புதிய திரைப்படம் மூக்குத்தி அம்மன். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா அம்மன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி,ஊர்வசி, அஜய் கோஷ்,இந்துஜா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.தற்போது மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளியன்று OTT மூலம் வெளியாகி ரசிகர்களால் கவரப்பட்டு இன்றுவரை அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மூக்குத்தி அம்மன் வெளியாகி சில நாட்களிலேயே இதுவரை ஹாட்ஸ்டாரில் வெளியான அனைத்துப் படங்களின் பார்வைகளையும் தாண்டி முதலிடத்தில் உள்ளது. தற்போது ஹாட்ஸ்டார் பக்கத்தில் ரசிகர்கள் மூக்குத்தி அம்மன் பார்ட்-2 வருமா என்று
நேரடியாக ஆர்கே பாலாஜியிடம் கேள்வி எழுப்பியபோது அதற்கு பதிலளித்த ஆர்.கே.பாலாஜி கூறியவை: ஓடாத படத்துக்கெல்லாம் பார்ட் 2 எடுக்கிறார்கள். இரண்டாம் பாகம் கண்டிப்பாக எடுப்போம். 'எல்.கே.ஜி' படத்துக்குப் பிறகு 'யூ.கே.ஜி' படமா என்று பலரும் கேட்டார்கள்.
இப்போது உடனே எல்லாம் மூக்குத்தி அம்மன் கிடையாது. நல்ல ஐடியா கிடைக்கும் போது கண்டிப்பாக எடுப்போம். உண்மையில், மூக்குத்தி அம்மன் 2 எடுக்கும் எண்ணம் உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.